மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 9 பேர் மீது வழக்கு
23-Nov-2024
புதுச்சேரி : முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி, சண்முகாபுரம், அண்ணா வீதியை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சரளா, 38. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சுகுணா என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் தனது குழந்தைகளை சரளா பள்ளிக்கு அழைத்து சென்றபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த சுகுணாவின் கணவர் பெரியசாமி, தனது குழந்தையை திட்டுவதுபோல், சரளாவை தகாத வார்த்தைகளால் திட்டினார்.இதனை சரளா, மணிமாறன் ஆகியோர் கண்டித்ததால், பெரியசாமி அவரது மனைவி சுகுணா, தந்தை முனுசாமி, தாய் சுசிலா ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.இருதரப்பினரும் தாக்கி கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், பெரியசாமி, சுகுணா, முனுசாமி, சுசிலா, சரளா, மணிமாறன் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Nov-2024