உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போஸ்டர் ஓட்டியவர் மீது வழக்கு  பதிவு

போஸ்டர் ஓட்டியவர் மீது வழக்கு  பதிவு

புதுச்சேரி; சிக்னல் பூத்தில் வாழ்த்து போஸ்டர் ஓட்டிய நபர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரியில் பேனர் வைக்கவும், அரசு கட்டடங்கள், வளாகங்களில் போஸ்டர் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, மேட்டுப்பாளையம் டிராபிக் போலீஸ் சிக்னல் பூத் சுவரின் மீது, திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.இது தொடர்பாக, கல்மேடுபேட் புவனேஸ்வர் மீது, திறந்த வெளி அழகை சீர்குலைத்தல் பிரிவின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ