உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார் உரிமத்தை புதுப்பிக்க போலி பத்திரம்: பெண் மீது வழக்கு பதிவு

பார் உரிமத்தை புதுப்பிக்க போலி பத்திரம்: பெண் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பார் உரிமத்தை புதுப்பிக்க போலி வாடகை பத்திரம் தயார் செய்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த சோரியங்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர் தினகரன், 54. இவருக்கு சொந்தமான இடத்தில், புதுச்சேரி, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த பிரபுதாஸ் மனைவி பிரீத்தா என்பவர் கடந்த 2014ம் ஆண்டு வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு, பார் நடத்தி வந்தார்.இதற்கிடையே, பார் உரிமையாளர் ஒவ்வொரு ஆண்டும் வாடகை பத்திரத்தை புதுப்பித்து, அதனை கலால் துறையிடம் கொடுத்து பார் உரிமத்தை புதுப்பித்துகொள்ள வேண்டும் என, அறிவித்திருப்பது தினகரனுக்கு தெரியவந்தது.ஆனால், 2014ம் ஆண்டிற்கு பிறகு பிரீத்தா, தினகரனிடம் எந்தவித வாடகை ஒப்பந்தமும் போடாததால், சந்தேகமடைந்துகலால் துறையிடம் விசாரித்துள்ளார். அதில், கலால் துறையில் 2014ம் ஆண்டு அளித்த வாடகை பத்திரத்தை தவிர மற்ற அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து தினகரன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோர்ட் உத்தரவின் பேரில், பிரீத்தா மீது டி.நகர் போலீசார் மோசடி வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை