மேலும் செய்திகள்
பெட்டிக்கடையில் பெட்ரோல்
22-Oct-2024
புதுச்சேரி; திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ஜெயபிரதாப், 30; திருவண்டார்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 2019ல் வேலை செய்து வந்தார். இவர் அதே கம்பெனியில் வேலை செய்த 26 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி, அவருக்கு தொல்லை கொடுத்து வந்தார்.அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து, தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு கூறியுள்ளார்.இதையடுத்து, ஜெயபிரதாப் அப்பெண்ணின் தாயை சந்தித்து, தனது அண்ணன் திருமணம் முடிந்தவுடன் பெற்றோருடன் வந்து பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.இதைநம்பி அப்பெண் ஜெயபிரதாப்பை காதலித்து, நெருங்கி பழகினார். இதனிடையே ஜெயபிரதாப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவன வேலையை விட்டு விட்டார். பின், கோலியனுாரில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஜெயபிரதாப் மறுத்துள்ளார்.இது குறித்து அப்பெண் வில்லியனுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், ஜெயபிரதாப் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Oct-2024