மேலும் செய்திகள்
குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது
22-May-2025
திருபுவனை; திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் மும்முனை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா இயக்கி வைக்கப்பட்டது.கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம் மற்றும் திருவாண்டார் கோவில் சாலை சந்திக்கும் மும்முனை சந்திப்பில் மில்டன் நிறுவனத்தின் சார்பில், பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராவை அங்காளன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். புதுச்சேரி மேற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி, இன்ஸ்பக்டர் கீர்த்திவர்மன், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கொத்தபுரிநத்தம், சன்னியாசிக்குப்பம், திருவாண்டார்கோவிலை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
22-May-2025