மேலும் செய்திகள்
ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
27-May-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று துவங்கி வைத்தார். இப்பணி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு 10 ஆண்டிற்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில், வரும் 2027 ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடுகளை பட்டியலிடம் பணி நேற்று துவங்கியது. இப்பணி வரும் 30ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. வீடுகள் கணக்கொடுப்பு பணியை கலெக்டர் குலோத்துங்கன், தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இயக்குநர் சுந்தரேஷ்பாபு ஆகியோர், லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரில் துவக்கி வைத்தனர். கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வீடு வீடாக சென்று, வீட்டின் வகை, வீட்டில் உள்ள வசதிகள், கழிவறை வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட 33 வகையாக கேள்விகள் கேட்டு தகவல்கள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இப்பணியை துவக்கி வைத்த கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், புதுச்சேரியில் முதல் கட்டமாக கடந்த 17ம் தேதி சுய கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது வீடு, வீடாக சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 3 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 17ம் தேதி முதல் 31ம் தேதிவரை நடந்த சுய கணக்கெடுப்பு பணியில் 4 முதல் 5 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணியை இந்த ஒரு மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணி முழுவதும் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய ஆணையத்தின் இயக்குநர் சுந்தரேஷ்பாபு கூறுகையில் மக்கள் தொகை கணக்கொடுப்பு இரு கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக வீடு குறித்து கிடைக்கும் தரவுகளை வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2ம் பகுதி வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும். முழு தகவல் வரும் 2027 ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்றார்.
27-May-2026