பாரதியார் பல்கலை படிப்புகளுக்கு சென்டாக் மெரிட் லிஸ்ட் வெளியீடு
புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கழக கூட நுண்கலை படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் பி.எப்.ஏ., பி.பி.ஏ., இசை, பி.பி.ஏ., நடனம் உள்ளிட்ட நுண்கலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அனைத்து பரிசீலனைகளும் முடிந்து, நேற்று வரைவு தரவரிசை பட்டியல் www.centacpuducherry.inஎன்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பி.எப்.ஏ., மெரிட் லிஸ்ட்டில் மாணவர் மனீஷா செந்தில்குமார் 88.560 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். இதேபோல், பி.பி.ஏ., இசை பிரிவு மெரிட் லிஸ்ட்டில் மாணவர் கயல்வேந்தன் 80.40 மதிப்பெண், பி.பி.ஏ., நடன பிரிவுக்கான மெரிட் லிஸ்ட்டில் மாணவி கனீஷ்கா 68.167 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர்.இந்த மெரிட் லிஸ்ட்டில் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வழியாக நுழைந்து தெரிவிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.