உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை

ஜான்குமார் எம்.எல்.ஏ., கருத்துபுதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது; புதுச்சேரியில் ஏற்கனவே உள்ள மதுபான கடைகளால் பல சீரழிவுகள் ஏற்படுகிறது. தற்போது கூடுதலாக 6 மதுபான ஆலை திறப்பது துரதிஷ்டவசமானது. முதல்வர் இதனை திரும்ப பெற வேண்டும்.அரசு மருத்துவ கல்லுாரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு இலவச கல்வி வழங்க வேண்டும்.திண்டிவனம் சாலையில் உள்ள டோல்கேட்டை சற்று தள்ளி புளிச்சப்பள்ளம் அருகே அமைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் கூட சரியாக நடக்கிறது. ஆனால், புதுச்சேரியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கிய நிதியில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளோம்.மத்திய அரசு புதுச்சேரிக்கு ஏராளமாக செய்தாலும், அதனை அதிகாரிகள் வீணாக்குகிறார்கள்.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பல தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் ஏற்பதில்லை. அனைத்து மருத்துவமனைகளும் அதனை ஏற்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.சிவப்பு ரேஷன் கார்டு கொண்டவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் சென்றடைய வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதரத்தை பாதிக்கும் பைக் வாடகை விடுவதை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ