மேலும் செய்திகள்
13வது ஸ்ரீ ஜெயந்தி இசை நிகழ்ச்சி
25-Aug-2024
சலவை தொழிலாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
18-Sep-2024
நெட்டப்பாக்கம்: விஸ்வகர்மா திட்டத்தின் ஓராண்டு பலன்கள் வெளியீடு மற்றும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், நெட்டப்பாக்கம் தொகுதியில் கைவினை கலைஞர்கள், படகு தாயரிப்பாளர், பூட்டு தொழிலாளி, கூடை, பாய், துடைப்பம் தாயரிப்பவர் என, 18 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நெட்டப்பாக்கம் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் நடந்தது.தொழிற்பயிற்சி முதல்வர் ருக்குமணி வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர்.
25-Aug-2024
18-Sep-2024