உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்

தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த பூராணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி சார்பில், முப்பெரும் விழா நடந்தது. விழாவில், பூராணாங்குப்பம் முழியன் குளத்தை துார் வாரி, சீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தன்னார்வர்களுக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை