| ADDED : ஆக 31, 2026 08:47 AM
புதுச்சேரி: ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கான தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 21ம் தேதி முதல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு கடந்த 21 முதல் 23ம் தேதி வரை நடந்தது. அதில், அறிவிக்கப்பட்ட 8 பணியிடங்களுக்கான 39,002 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 15,555 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வின் ஆன்சர் கீ வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து,விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பின், மதிப்பீடு செய்யப்பட்டது. இந்தபணிகள் நிறைவடைந்து, தற்காலிக பட்டியல் recruitment.py.gov.inஇணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 21 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை பின் அறிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நிவைடைந்த பின், தற்காலிக பதவி ஒதுக்கீடு, தேர்வு பட்டியல் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும். மதிப்பெண் அடிப்படையில் பதவி ஒதுக்கீடு செய்யப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெற இயலாது என, தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.