உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

 தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காப்புக் கலை பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அறிவழகி, விரிவுரையாளர் தமிழ்ச்செல்வி, கணித ஆசிரியர் சுஜாதா மற்றும் திரைத் துறை ஓவியப் படைப்பு சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே மாஸ்டர் லக்குண குமாரன் தற்காப்புக் கலைப் பயிற்சி அளித்தார். பள்ளியின் துணை முதல்வர் மாலதி, பயிற்சி பெற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர்கள் கதிரவன், லட்சுமிபிரியா ஆகியோர் வரவேற்றனர். தமிழாசிரியர் பிரேம்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கணித ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி