செயின் பறிப்பு
புதுச்சேரி: சென்னையை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சசிரேகா,30; இவர், மூலக்குளம், அன்னை தெரசா நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்கு வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு மூலக்குளம் மெயின் ரோட்டில் இருந்து வீட்டிற்க சென்றுக் கொண்டிருந்தார். ஜே.ஜே., நகர் அருகே சென்றபோது, பின்னால், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், சசிரேகா கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.