உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுள்ளியாங்குப்பத்தில் தேர் திருவிழா

 சுள்ளியாங்குப்பத்தில் தேர் திருவிழா

பாகூர்: சுள்ளியாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக்கொள்ளை உற்சவ தேர் திருவிழா நடந்தது. கிருமாம்பாக்கம் அடுத்த சுள்ளியாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 59ம் ஆண்டு மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி ஊரணி பொங்கல் வீதியுலா, 27ம் தேதி, மயனாக்கொள்ளை உற்சவம் நடந்தது. 28ம் தேதி மஞ்சல் நீர் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று (1ம் தேதி) காலை 7:00 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் வடம் பிடித்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதியுலா சென்று அருள்பாலித்தார். இதில், சுள்ளியாங்குப்பம், கொரவள்ளிமேடு, மதிகிருஷ்ணாபுரம், கன்னியக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி