திருக்காமீஸ்வரர் கோவிலில் 8ம் தேதி தேர் திருவிழா; கவர்னர் வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்
வில்லியனுார்; வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது.வில்லியனுார், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா 22ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 29ம் தேதி பிடாரி அம்மன் ரத உற்சவம், 30ம் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. 31ம் தேதி இரவு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், 3ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சி, நேற்று காலை 10:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட 63 நாயன்மார்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நாளை 7ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 8ம் தேதி தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 7:40 மணியளவில் சுவாதி நட்சத்திரத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக் குமார், சாய்சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட் டோர் பங்கேற்று, வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். 9ம் தேதி தெப்ப உற்சவம், 10ம் தேதி விடையாற்றி உற்சவம் நடந்தது.