உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவரிடம் ரூ.4.62 லட்சம் மோசடி

முதியவரிடம் ரூ.4.62 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பவழ நகர், புதுத்தெருவைச் சேர்ந்தவர் சிவ சண்முகம், 63. இவரது மொபைல் எண்ணிற்கு கடந்த 28ம் தேதி போக்குவரத்து விதிமீறல் தொடர்பான ஆர்.டி.ஓ., இ–சலான் செயலி வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய சிவ சண்முகம், அந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து அனுமதியின்றி 3 தவணைகளாக 4 லட்சத்து 62 ஆயிரத்து 348 ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர். இதைகண்டு அதிர்ச்சியடைந்த சிவ சண்முகம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜீரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்து, மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.5 லட்சத்திற்குள் இருப்பதால், மேல் விசாரணைக்காக, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !