அரசு பள்ளியில் வேதியியல் கருத்தரங்கம்
பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் கருத்தரங்கம் நடந்தது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடந்த வேதியியல் கருத்தரங்கிற்கு, தலைமை ஆசிரியர் கோமதி தலைமை தாங்கினார். ஆசிரியை சங்கரிதேவி வரவேற்றார்.நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, வில்லியனூர் விவேகானந்தா அரசு மேனிலைப் பள்ளி வேதியியல் விரிவுரையாளர் முரளி பங்கேற்று, 'வேதியியல் பாடத்தில் எழும் ஐயங்களும் அதற்கான தீர்வுகளும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாணவர்கள், தங்கள் ஐயங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.கணினி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.