உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியருக்கு செவாலியே விருது அறிவிப்பு

புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியருக்கு செவாலியே விருது அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் பல பகுதிகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வரும் வெங்கடசுப்புராய நாயகருக்கு செவாலியே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு நிறுவன பிரெஞ்சு துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 15க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நுால்களை மொழி பெயர்த்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பிரெஞ்சு அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.தமிழின் சங்க இலக்கிய செல்வமான குறுந்தொகை, ஐங்குறுநுாறு ஆகியவற்றை முழுமையாக பிரெஞ்சு மொழியில் இவர் மொழிபெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல தமிழ் சிறுகதைகள், கவிதைகளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.அவரின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சேவையை அங்கீகரிக்கும் விதமாக வெங்கட் சுப்புராய நாயகருக்கு செவாலியே விருது வழங்கப்படும் என்ற முடிவை பிரஞ்சு மொழி பாராளுமன்ற கூட்டு அவை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதியில் புதுச்சேரி வரவிருக்கும், பிரெஞ்சு பேசும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு இந்த விருதை அவருக்கு வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி