மேலும் செய்திகள்
கோமாதா, வேல் பூஜை
27-Oct-2025
புதுச்சேரி: உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது வாழ்த்து செய்தி; மும்பையில் நடந்த 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல் முறையாக கோப்பையை வென்று வர லாற்றில் தனது பெயரைப் பொறித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் மூலம் உலக அளவில் இந்தியாவின் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ள நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவரும் நம் நாட்டின் பெருமையாக திகழ்கின்றனர். இந்த சிறப்பான வெற்றி, நம் நாட்டின் அனைத்து மகளிருக்கும் ஒரு புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாகும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வீராங்கனை களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மன மார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.
27-Oct-2025