உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆழ்துளை கிணறு பணி: முதல்வர் துவக்கி வைப்பு

ஆழ்துளை கிணறு பணி: முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். தொகுதிக்குட்பட்ட, ரோஜா நகர், திருக்குறளார் நகர், பாரதிதாசன் நகர், வசந்தம் நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், எழில் நகர், வள்ளியம்மை நகர், நடராஜன் நகர், சண்முகா நகர் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனை போக்க, பொதுப்பணித்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், நாராயணசாமி எம்.எல்.ஏ., உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !