மேலும் செய்திகள்
பாகூரில் பஸ் நிலையம்: முதல்வர் திறந்து வைப்பு
17-Jul-2025
பாகூர்: நரம்பை மற்றும் மூ.புதுக்குப்பத்தில் ரூ.2.33 கோடி மதிப்பில் மீனவர் மேம்பாட்டு திட்ட பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்டம் சார்பில், ஏம்பலம் தொகுதி, நரம்பை கிராமத்தில் ரூ.1.24 கோடி செலவில், வலை பழுதுபார்க்கும் கூடம், ரூ.47.87 லட்சம் செலவில் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. அதேபோல், பாகூர் தொகுதி, மூ.புதுக்குப்பத்தில் ரூ.61.86 லட்சம் செலவில் வலை பழுது பார்க்கும் கூடம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மீன்வளத்துறை செயலர் மணிகண்டன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் கார்த்தி மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர்.
17-Jul-2025