உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குடிநீர் குழாய் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 குடிநீர் குழாய் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் புதிய குடிநீர் பங்கிட்டு குழாய் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதியில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.15.94 கோடி மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைத்தல், வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பணியினை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு, உதவி பொறியாளர் ஸ்ரீதரன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை