உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உதவி அரசு குற்றவியல் வக்கீல்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கல்

உதவி அரசு குற்றவியல் வக்கீல்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களுக்கு உதவி அரசு வழக்கறிஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் 5 வழக்கறிஞர்களை, உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அனுமதி வழங்கினார். அதன்படி, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 4 இளங்கோவன், மகளிர் நீதிமன்றம் - ஜெயமாரிமுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -5 ஜெரால்ட் இமானுவேல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 7 தேவேந்திரன், காரைக்கால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 இயேசு ராஜ் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான பணி ஆணைகளை முதல்வர் ரங்கசாமி, வழக்கறிஞர்களிடம் சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார். இதில், சட்டத்துறை செயலர் விக்ராந்த் ராஜா, சார்புச் செயலர் ஜான்சி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி