மேலும் செய்திகள்
54 மீனவர்களுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம் வழங்கல்
23-Jun-2025
புதுச்சேரி : புதுச்சேரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் முகத்துவாரம் துார்வாரும் இயந்திரமான பார்ஜி-யின் கதவு உடைந்து விழுந்து முகத்துவாரத்தின் நுழைவு பகுதி அடைப்பட்டது. தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்லும் விசைபடகுகள் 16 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மீன்பிடி விசைபடகு உரிமையாளர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தனர். இதையேற்று 79 மீன்பிடி விசைபடகு உரிமையாளர்களுக்கு வாழ்வாதார இழப்பிற்கு 52 லட்சத்து 58 ஆயிரம் நிவாரண தொகையை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசுகொறடா ஆறுமுகம், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, திட்ட அதிகாரி மீரா சாஹிப் உட்பட பலர் உடனிருந்தனர்.
23-Jun-2025