உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் துவக்க விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு இருக்கும் போது, அதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதற்கு நல்லநுால்களை படியுங்கள். மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அளவில் ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும், புதுச்சேரியில் 500 பேருக்கு ஒன்றுஉள்ளது. கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள், நேரடியாக வீட்டிற்கே சென்று பொது மக்களிடம்நலம் விசாரித்து மருந்துகள் வழங்கினால், அரசிற்கு நல்ல பெயர் வரும். அது ஒரு சேவையாக நினைத்து பணியாற்ற வேண்டும். பள்ளி படிப்பை முடித்து கல்லுாரி செல்லும் பிள்ளைகள் போதை பழக்கத்துக்கு ஆளாகிவிடக்கூடாது. சிலர் பணக்காரர்களாகமாறுவதற்கு, நமது பிள்ளைகளை கெடுக்கின்றனர். போதை பழக்கம் மோசமானது. போதைக்கு அடிமையாகிவிட்டகுழந்தைகளை பார்த்தாலே நமக்கு ஒரு வகை அச்ச உணர்வு ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் என்ன செய்கின்றனர் என்பது அவர்களே தெரியாத நிலை உள்ளது. நன்றாக மகிழ்வாக வாழத் தான் கடவுள் வாழ்க்கைதந்துள்ளார். வாழ்க்கை நன்றாக வாழ உடல் நலன் சரியாக இருக்க வேண்டும். தீய பழக்கங்கள், தீய வழிகளுக்கு அடிமையாகாமல், நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொண்டு நன்றாக படிக்கவேண்டும். அதேபோல், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை தவிர்த்து நம்மை காத்து கொள்வது எப்படி,அதற்கு மருத்துவத்துறை என்னவசதி செய்து கொடுகிறது என்பதுகுறித்து விழிப்புணர்வுஏற்படுத்த தான் இந்த நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு 20 சதவீதம் ஆக உள்ள நிலையில், புதுச்சேரியில் 18 சதவீதம் தான் உள்ளது.எச்.ஐ.வி.,தொற்று பாதிப்பில் புதுச்சேரியில்1,256 பேர் உள்ளனர். இந்த பாதிப்பு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமானதுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுத்து கொண்டிருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டோரின்குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். அதேபோல்,மருத்துவ பயணப்படி ரூ. 400ல் இருந்து 1,000ரூபாயாக உயர்த்தி தர முடிவு எடுத்துள்ளோம். நல்ல சத்துணவு வேண்டும் என்பதற்காக ரூ. 1,250 மதிப்புள்ள சத்துணவு பெட்டகம் வழங்கப்படவுள்ளது. எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி அளவில் ரூ. 5 ஆயிரம், கல்லுாரி மாணவர்களுக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின்குடும்பத்திற்கு இறுதிச் சடங்கு நடத்த உதவி தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இது விரைவில்செயல்படுத்த உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை