என்.ஆர்.காங்., நிர்வாகிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் சட்டசபை தொகுதி, என்.ஆர்.காங்., மாநில செயலாளர் அழகானந்தம் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார். புதுச்சேரி என்.ஆர்.காங்., மாநில செயலாளர் அழகானந்தம் பிறந்த நாள் விழா, வெற்றிவேலா ரியல் குரூப்ஸ் மற்றும் நண்பர்கள் சார்பில், கடந்த 13ம்தேதி நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர் முதல்வர் ரங்கசாமி, மாநில செயலாளர் அழகானந்தத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் மற்றும் என்.ஆர்.,காங்., நிர்வாகிகள், வெற்றிவேலா குரூப்ஸ் நண்பர்கள் பாலு, சுகுமார், அருண்ராஜ், ஜீவானந்தம், சக்திவேல், பிரபா, கதிரவன், சிவா, வெங்கடேசன், அரசன், ஹரி, ரித்தேஷ் உட்பட பலர் வாழ்த்தினர். பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.