உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பல் மருத்துவ நிறுவனத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

அரசு பல் மருத்துவ நிறுவனத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி : அகில இந்திய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி அரசு பல் மருத்துவ நிறுவனம் 23வது இடம் பிடித்ததற்காக, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் நாடு முழுதும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை தரவரிசைப் படுத்துவதற்காக துவங்கப்பட்டது. இது, கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி, பட்டப்படிப்பு முடிவுகள், வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தில் கல்லுாரியை பற்றிய மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான பல் மருத்துவக் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலில், கோரிமேடு அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் 23ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில் இக்கல்லுாரி மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கல்லுாரி கடந்த ஆண்டு 35வது இடத்திற்கு தேர்வாகி இருந்த நிலையில், தற்போது 12 இடங்கள் முன்னேறி 23வது இடம் பெற்றிருப்பது புதுச்சேரிக்கு பெருமையாக உள்ளது. சாதனைக்காக பல் மருத்துவ கல்லுாரி முதல்வர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கல்லுாரியில் இந்த கல்வியாண்டு முதல் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கை 125 இடங்கள் அதிகரித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி