மேலும் செய்திகள்
பாதுகாப்பு அதிகாரிகளுடன் டி.ஐ.ஜி., ஆலோசனை
15-Mar-2025
புதுச்சேரி: ஏ.எப்.டி., மில்லை கேட்பவர்களிடம் எல்லாம் துாக்கி கொடுத்துவிட முடியாது என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது; மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வருவதன் மூலம் மாநில வருவாய் பெருகும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நிதி சுமை இருந்தால், தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ட்டின் குழுமத்திடம் பஞ்சாலைகளை வழங்கினால் எடுத்து இயக்குவதற்கு தயாராக உள்ளது.முதல்வர் ரங்கசாமி: ஏ.எப்.டி., மில் அரசு சொத்து. கேட்பவர்களிடம் எல்லாம் அப்படியே துாக்கி கொடுத்துவிட முடியாது. ஆலையை தனியார் பங்களிப்போடு நடத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று ஆலோசனை கூறலாம். அதற்கென விதிமுறைகள் உள்ளது.ஆலையை நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்த ஆலைகளை அரசால் சரியாக எடுத்து நடத்த முடியாது. ஆலை ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் ரூ.139 கோடி சம்பளமாக கொடுத்துள்ளோம்.சம்பத் (தி.மு.க.,): காலாப்பட்டு தொகுதியில் பல பிரச்னைகள் வைத்து கொண்டு என் தொகுதியில் உள்ள பஞ்சாலைகள் மீது பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு ஏன் இவ்வளவு அக்கறை. முதல்வருக்கு இல்லாத அக்கறை பா.ஜ.,வுக்கு மட்டும் ஏன்? பஞ்சாலைகளை யார் மூடியது என்று பதில் சொல்லுங்கள். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.கல்யாணசுந்தரம்: மில்லை நாங்கள் மூடவில்லை, என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
15-Mar-2025