மேலும் செய்திகள்
இனி கூகுள் பே-வில் இதை செய்தால் கட்டணம்!
21-Feb-2025
தொல்பொருள் துறையில் பொருளாதார ஒழுங்கின்மை
25-Feb-2025
புதுச்சேரி: மத்திய அரசு திட்டமான சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான 'கட்டணமில்லா சிகிச்சை திட்டம்' துவக்க விழா முதலியார்பேட்டை நுாறடி சாலை சன்வே ஓட்டலில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது;பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலமாக சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1.50 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும். இதன் மூலம் விபத்து உயிரிழப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.சில சமயங்களில் விபத்துக்களில் சிக்குபவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயங்குகிறார்கள். பெரும்பாலானோர் போலீசாரை கண்டு அச்சப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பொதுமக்களிடம் போலீசார் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.புதுச்சேரியில் விபத்தில் படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் மனப்பான்மை பொதுமக்களுக்கு வர வேண்டும்.புதுச்சேரியில் சாலைகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்க வேண்டும். மொபைல் போனில் பேசியபடி வாகனங்களை இயக்கக்கூடாது. விபத்துகளுக்கு இதுவே முக்கிய காரணியாக உள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்படுத்துவது அவசியம் என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் அரசு செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
21-Feb-2025
25-Feb-2025