மனை வழங்குவதற்கான சான்றிதழ் முதல்வர் ரங்கசாமி வழங்கல்
அரியாங்குப்பம்: கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், உறுப்பினர்களுக்கு மனை வழங்குவதற்கான, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தில் நடந்தது.சங்கத்தின் செயலாளர் அமுதரசன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி, மனை வாங்கிய உறுப்பினர்கள், 44 பேருக்கு சான்றிதழ் வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்றனர், நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், 'புதுச்சேரியில் ஒரு காலத்தில் கூட்டுறவு சங்கள், நிறுவனங்கள் சிறப்பான நிலையில் இருந்து. பல ஆண்டுகளாக சங்கங்கள் சரியாக செயல்படாமல் நலிவடைந்த நிலையில் இருந்தது. என்.ஆர்.காங்., அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களையும் நிமிர்த்தி, அதனை செயல்பட வைத்துள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு சங்கத்தின் மூலம், மனை பிரித்து கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.