உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை தனியார் மயமாக்குவதை முதல்வர் தடுக்க வேண்டும்: அ.தி.மு.க.,

மின்துறை தனியார் மயமாக்குவதை முதல்வர் தடுக்க வேண்டும்: அ.தி.மு.க.,

புதுச்சேரி: மாநில சொத்தான மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் சர்வாதிகார செயலுக்கு முதல்வர் தடை போட வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் லாபத்தில் இயங்கும் மின் துறையை மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருக்கமானவர்களுக்கு தாரை வார்க்க மாநில அரசு பச்சை கொடி காட்டுகிறது.தனிநபர் பயன்பெற மக்களின் வரிப் பணத்தில் ரூ.383.58 கோடி செலவில் புதிய ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே ரூ.200 கோடிக்கு மேல் உள்ள 4 லட்சம் மீட்டர்களை அரசு குப்பையில் போடப்போகிறதா? பணம் கொடுத்து மீட்டர் பொருத்தியுள்ள நுகர்வோருக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகையை வழங்குமா? இந்த திட்டத்தால் மின்துறையில், 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். நுகர்வோரிடம் இருந்து ஸ்மார்ட் மின் மீட்டர் செலவுக்கான பணம் பிடித்தம் செய்யப்படும். புதிதாக பொருத்தப்படும் மீட்டருக்கும் புதிய வரி வசூல் செய்யப்படும்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததை போன்ற போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ