ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து
புதுச்சேரி: இன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி;உங்களது பிறந்த நாளுக்கு புதுச்சேரி மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உங்கள் வாழ்க்கையை சேவையாக, அர்ப்பணிக்கிறீர்கள் என்பதை நாடு நன்கு அறிந்திருக்கிறது.உங்கள் தியாகத் தலைமையாலும், நமது தேசத்தின் வளர்ச்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பாலும் இந்திய மக்களைத் தொடர்ந்து வழிநடத்தி மேம்படுத்த, நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என, கூறப்பட்டுள்ளது.