முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா, பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை விழாவை, அரியாங்குப்பம் தொகுதியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு, முதல்வரின் சாதனைகள், அவர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், என்.ஆர். காங்., தொகுதி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., தலைமையில், கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, முதல்வரிடம் ஆசி பெற்றனர்.