உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வரின் தீபாவளி அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை

முதல்வரின் தீபாவளி அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை

புதுச்சேரி : தீபாவளி பண்டிகையையொட்டி முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்புகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கூறியதாவது:புதுச்சேரியில் பா.ஜ., - என். ஆர்.காங்., கூட்டணி மின் துறையைதனியார் மயமாக்கும் நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளதாக ஒளிவு மறைவின்றி தெரிகிறது.காரைக்கால் பார்வதி ஈஸ்வரர் கோவில் விவகாரத்தில் சர்வேயர், துணை கலெக்டர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. முதல்வர் ரங்கசாமியும், கவர்னரும்இது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.வில்லியனுார் , மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, ரூ.15 கோடி மதிப்புள்ள, 35 ஆயிரத்து 600 சதுர அடி இடத்தை பாதுகாக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதுச்சேரி மாநிலத்தில்பல நுாறு கோடி மதிப்பில்கோவில்சொத்துக்கள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் கவர்னர்தலையிட்டு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.உறுதிமொழி குழுவில் இருந்து நேரு எம்.எல்.ஏ.,நீக்கப்பட்டது குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி, வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. பொதுமக்கள் பையோடு அரிசி வாங்க சுற்றி வருவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ