உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன் அனுமதியின்றி விடுப்பு தலைமை செயலர் எச்சரிக்கை

முன் அனுமதியின்றி விடுப்பு தலைமை செயலர் எச்சரிக்கை

புதுச்சேரி: முன் அனுமதியின்றி விடுப்பு எடுத்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலர் சரத் சவுகான், அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அவரது சுற்றறிக்கை;அரசு ஊழியர்கள் முன் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட விடுப்பு காலங்களை விட கூடுதலாக விடுப்பு எடுப்பது, அலுவலகம் தொடர்பாக, வெளியே சென்று தங்கும் போது, மீண்டும் அனுமதி இல்லாமல் காலத்தை நீட்டிப்பது ஆகியவை அரசு ஊழியர் விதிகளுக்கு புறம்பானது. மீறி விடுப்பு எடுக்கும் ஊழியர்களிடம், அத்தகைய நாட்களில் சம்பளம் துண்டிக்கப்படும். விதிகளை மீறும் ஊழியர்கள் மீது துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பான விபரங்களை, துறை அதிகாரிகள் தலைமை செயலகத்திற்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ