உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தை திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் இந்துமணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மரிய மார்டின் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு, குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், பெண்களுக்கான திருமண வயது 18, ஆண்களுக்கு 21 சமுதாய வழக்கம். அதனை மீறினால் குற்றமாகும். குழந்தைகள் கல்வி கற்பது, அவர்களது உரிமை என அறிவுறுத்தினார். ஆசிரியர் ரீட்டா மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இர்வின் மாலோ, இந்திரா, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை