உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா

நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர் நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் கிரண்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் ட்ரஸ்டியும் பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில தலைவருமான சக்தி கிருஷ்ணராஜ், சமூக சேவகர் விஜயலட்சுமி கிருஷ்ணராஜ், ஷி ரைஸ் நிறுவனர் ரூபிணி, எஸ்.வி., வித்யாலயா நிறுவனர் அனுராதா ராஜகோபால், நிகழ்வு மேலாண்மை தீபிகா, மலர் பிரைடல் அகாடமி உரிமையாளர் மலர் ஆகியோர் பங்கேற்று பேசினர். விழாவையொட்டி, மாணவ –மாணவிகளுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மழலைகள் தேசத் தலைவர்கள் போல் வேடமணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மழலையர் வகுப்பு மாணவர்கள் முதியோர் இல்லத்திற்கு சென்று இனிப்பு மற்றும் உணவு பொருட்களை வழங்கி, முதியோர்களிடம் ஆசிபெற்றனர். தலைமையாசிரியர் உமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை