உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர் நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் கிரண்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் டிரஸ்டி கிருஷ்ணராஜ், குழந்தைகள் தினம் குறித்து பேசினார். குழந்தைகள் தினத்தையொட்டி, புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டியில் பங்கேற்று வட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று, கல்வி துறை அமைச்சர் மற்றும் இயக்குநரிடம் பரிசு பெற்ற மாணவர்களை, பள்ளி சேர்மன் கிரண்குமார் பாராட்டினார்.விழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் உமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை