கூடப்பாக்கம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் அண்ணாமலை ரெட்டியார் அரசு மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் புவியரசன் முன்னிலை வகித்தார். வேதியியல் விரிவுரையாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.நிகழ்ச்சியில் கூடப்பாக்கத்தை சேர்ந்த ராமசந்திரன், ராமதாஸ், பா.ஜ., ஊசுடு தொகுதி பொதுச்செயலாளர் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை விரியுரையாளர் திலகவதி, மலர்விழி, அனிதாகுமாரி, சுகந்தி, அமுதா, உடற்கல்வி ஆசிரியர் நந்தகோபால் உட்பட பலர் செய்திருந்தனர். ஆசிரியை சங்கரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விலங்கியல் விரிவுரையாளர் இளங்கோ நன்றி கூறினார்.