மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை 'ஸ்டார்' விற்பனை ஜோர்
17-Dec-2024
புதுச்சேரி: கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கொண்டாட்டம் கல்லுாரி அரங்கில் நடந்தது.மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் பங்கு தந்தை ஜோதாமஸ் சிறப்பு பிரார்த்தனையை துவக்கி வைத்தார். பிம்ஸ் சேர்மன் அருண் குரியன் ஜோசப் தலைமை தாங்கினார். பிம்ஸ் முதல்வர் ரேணு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இருதய நிபுணர் அமல்பால் பங்கேற்று, கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி வாசித்தார்.மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் துணை தலைவர் ஜோசப் ஆப்ரகாம் வரும் ஆண்டு 2025 பிம்ஸ் மருத்துவ காலண்டரை வெளியிட்டார்.பின், மருத்துவ மாணவ மாணவிகளின் கிறிஸ்துமஸ் சிறப்பு நாடகம், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மற்றும் பிம்ஸ் மாணவிகள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை பாடல்களை பாடினர். கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். பொது நிர்வாக மேலாளர் ஜார்ஜ் தாமஸ், பதிவாளர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், துணை முதல்வர் நிஷாந்த், பிம்ஸ் பங்குதந்தை ஜோபி ஜார்ஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
17-Dec-2024