மேலும் செய்திகள்
பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
23-Dec-2024
புதுச்சேரி: கியூர் ஸ்பெஷல் டேகேர் மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.புதுச்சேரி, வில்லியனுார் மெயின் ரோடு, விவேகானந்தா நகரில் கியூர் காது கருவி கிளினிக் வளாகத்தில், கியூர் ஸ்பெஷல் டேகேர் மையம் இயங்கி வருகிறது. டேகேர் மையத்திற்கு வரும் சிறார்களுக்கு காலை, மாலை என இரு பேட்ஜ் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.டேகேர் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கியூர் ஸ்பெஷல் டேகேர் மையத்தின் நிறுவனர் முத்துக்குமரன் ஏற்பாட்டின்படி நடந்த விழாவில், நிர்வாக அலுவலர் அபிநயா தலைமை தாங்கினார். மனித வள மேம்பாட்டு அதிகாரி கலைச்செல்வி முன்னிலை வகித்தார். கிறிஸ்துமஸ் விழாவில், மாணவர்களுக்கு கேக், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதே போன்று, சிதம்பரம், கடலுார், திருத்தணி, அரக்கோணம், வடபழனி, காஞ்சிபுரம் ஆகிய கிளைகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். டேகேர் மைய பயிற்சியாளர் சங்கரி நன்றி கூறினார்.
23-Dec-2024