மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
24-Dec-2024
பாகூர் : தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் கிரண்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் டிரஸ்டி சக்தி கிருஷ்ணராஜ், கிறிஸ்துமஸ் விழா குறித்து பேசினார். விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் ஏசு குடில், கிறிஸ்துமஸ் மரம் போன்றவை அமைக்கப்பட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். விழாவையொட்டி, பேச்சு போட்டி, நாடகம், கவிதை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ஆடிப் பாடி, நண்பர்களுக்கு பரிசுகளை வழங்கி, அன்பை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியை பாரததேவி தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.
24-Dec-2024