மேலும் செய்திகள்
ஸ்ரீ குருமுகி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
22-Dec-2024
பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா
24-Dec-2024
புதுச்சேரி: புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயா ஆலய பங்கு தந்தை ஜோசப் பால் அடிகள், புதுச்சேரி, கடலுார் மறைமாவட்ட பேராயர் பீட்டர் ராஜேந்திரன் பங்கேற்றுதொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடிலை ஆசிர்வதித்து, சிறப்புரை நிகழ்த்தினர்.தொடர்ந்து, தேசிய அளவில் விளையாட்டு போட்டி, மற்றும் மாநில அளவில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில், மருத்துவ இயக்குநர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர்ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாணவர் ஜோஷ்வா இம்மானுவேல் நன்றி கூறினார்.
22-Dec-2024
24-Dec-2024