உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொடாத்துாரில் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கொடாத்துாரில் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருக்கனுார் : கொடாத்துாரில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க கோரி பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி, கொடாத்துார், ராஜிவ்காந்தி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள தார் சாலை சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இச்சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.இதைக்கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8:00 மணி அளவில் திருக்கனுார் - வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பகுதியில் புதிதாக சிமென்ட் சாலை, தானியங்களை உலர்த்த களம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.இதற்கு, ஆணையர், இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க பாட்கோ மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிமென்ட் சாலை கேட்பதால், அதற்கு கூடுதல் நிதி தேவைப்படும். எனவே, நிதி ஒதுக்கீடு செய்து புதிய சிமென்ட் சாலை அமைக்க கால அவகாசம் தேவை என்றார். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், திருக்கனுார்- வழுதாவூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்துபாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை