உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 8,418 மாணவர்கள் எழுதினர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 8,418 மாணவர்கள் எழுதினர்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நேற்று நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8,418 மாணவர்கள் எழுதினர்.தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. புதுச்சேரி பகுதியில் 20 மற்றும் காரைக்கால் பகுதியில் 6 ஆகிய இடைநிலை மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு பணியில் மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.புதுச்சேரி பகுதியில் நடந்த தேர்வில் 146 தனியார் பள்ளிகளை சேர்ந்த 7,271 மாணவர்கள், 362 தனித்தேர்வர்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1183 மாணவர்கள், 167 தனித்தேர்வகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த தமிழ் மற்றும் இதர மொழிப் பாட தேர்வில் புதுச்சேரியில் 7,246 மாணவர்கள் பங்கேற்றனர். 20 மாணவர்கள் ஆப்சென்டாகினர். 5 மாணவர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோன்று, 346 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.16 மாணவர்கள் ஆப்சென்டாகினர். காரைக்காலில் 1172 மாணவர்கள் பங்கேற்றனர். 3 மாணவர்கள் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 8 மாணவர்கள் ஆப்சென்டாகினர். இதேபோன்று, 158 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். ஒருவருக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 8 பேர் ஆப்சென்டாகினர்.தேர்வு துவங்கும் முன் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10 நிமிடம் வினாக்களை படிக்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாளில் தங்களின் விவரங்களை பதிவு செய்து சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டது. பின், காலை 10:15 மணிக்கு விடைகள் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை