உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய்மை இந்தியா போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு

துாய்மை இந்தியா போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பள்ளி மாணவர்களுக்கு துாய்மை இந்தியா குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், பண்டசோழநல்லுாரில் உள்ள மேல்நிலை, நடுநிலை, துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு துாய்மை இந்தியா தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நெட்டப்பாக்கம் காந்தி பூங்காவில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கிானர். டெங்கு நோடல் அதிகாரி பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை