மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
06-Sep-2024
புதுச்சேரி, : மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி விலை கண்காணிப்பு மற்றும் ஆதார பிரிவு சார்பில், கோரிமேடு இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.மத்திய அரசின் வழிக்காட்டுதல்படி நடந்த இந்த முகாமில், மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி அனந்த கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர், கள ஆய்வாளர், மருந்து ஆய்வாளர், பள்ளியின் துணை முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் துாய்மை சேவை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேலும், மாணவர்களிடையே 'துாய்மையே சேவை - 2024' என்ற தலைப் பில் ஒவியம், கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
06-Sep-2024