உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜிப்மர் வளாகத்தில் மானிய விலையில் உணவகம் முதல்வர் திறந்து வைப்பு

 ஜிப்மர் வளாகத்தில் மானிய விலையில் உணவகம் முதல்வர் திறந்து வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுடன் இணைந்து ஜிப்மர் வளாகத்தில் மானிய விலையில் உணவகம் திறக்கப்பட்டது. ஜிப்மர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர் முரளிதரன், ஜிப்மர் மற்றும் புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டு கழகம் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த உணவகம், மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனம் ஐ.என்.ஐ., ஜிப்மரில், புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனை வளாகத்தில் குறைந்த விலையில், உணவுச் சேவை உறுதி செய்யப்படும். உணவகம் உயர்தர சுகாதார மற்றும் தரநிலைகளை பின்பற்றி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மூலம் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. தற்போது இவ்வுணவகம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். விரைவில் 24 மணி நேர சேவையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ravi Kulasekaran
பிப் 11, 2026 13:40

நல்லாட்சி நடைபெற்று வருகிறது புதுச்சேரி பாஜக என் ஆர் காங்கிரஸ் ஆட்சி மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் போன்ற திட்டங்கள் வரவேற்க்க தக்கது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை