உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலத் தகராறில் தென்னங்கன்றுகள் சேதம்

நிலத் தகராறில் தென்னங்கன்றுகள் சேதம்

பாகூர்: பாகூர் அடுத்த கரையாம்புத்தூர், நேரு நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 40. இவருக்கும் இவரது சித்தப்பா பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பான, வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது.இந்நிலையில், கடந்த 18ம் தேதி பாக்கியலட்சுமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாலகிருஷ்ணன் தரப்பினர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தென்னங்கன்றுகளை பிடுங்கி சேதப்படுத்தி உள்ளனர்.இது குறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை