| ADDED : நவ 22, 2025 06:05 AM
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். பரிகார ஸ்தலமான திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், சிலர் 'கைடு' எனக் கூறி சிறப்பு தரிசனம் பார்க்கலாம் எனவும், பரிகாரம் செய்வதாக கூறி பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருநள்ளாறு அடுத்த பூமங்கலம் வானகர தெரு கலியபெருமாள் மகன் கார்த்தி,42; மடவிளாகம் கவுதம் மகன் பசுபதி,35; ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, சார்பு கோட்ட நீதிபதி பூஜா முன் ஆஜர்படுத்தினர். இருவரையும் விசாரித்த நீதிபதி பூஜா, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து, இருவரிடமும் நன்னடத்தை சான்று எழுதி பெற்றுக் கொண்டு, தலா ரூ.2 லட்சம் சொத்து ஜாமினில் விடுவித்தார்.